செய்திகள்

பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது- கே.எஸ்.அழகிரி

Published On 2019-04-16 11:07 GMT   |   Update On 2019-04-16 11:47 GMT
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். #Loksabhaelections2019 #Congress #KSAlagiri
அவனியாபுரம்:

மதுரையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும். இந்த திட்டத்தினை கண்டு பா.ஜனதா அச்சம் அடைந்துள்ளது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே தான் மாநிலங்கள் விரும்பினால் நீட் தேர்வை வைத்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது.

நீட் தேர்வு குறித்து பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் எந்த தகவலும் இல்லை. ஜி.எஸ்.டி. வரியை முறைப்படுத்துவோம். தமிழகத்தில் பா.ஜனதா அமைத்துள்ள கூட்டணி அவசர கூட்டணி ஆகும்.



பிரதமர் தன்னை காவலாளி என்று கூறி வருகிறார். அவர் குற்றவாளிகளை பாதுகாக்கும் காவலாளியாக உள்ளார். எங்களுடைய கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #Congress #KSAlagiri
Tags:    

Similar News