செய்திகள்
கொள்ளை (கோப்புப்படம்)

தக்கலை அருகே வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை பணம் கொள்ளை

Published On 2019-11-24 09:42 GMT   |   Update On 2019-11-24 09:42 GMT
தக்கலை அருகே பின்பக்க வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

தக்கலை அருகே கொற்றியோடு முட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிலிப் (வயது 64).

இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் சிஜா, மாமனார் வீட்டில் இருந்து வந்தார். நேற்று மாலை பிலிப் குடும்பத்தோடு அந்த பகுதியில் உள்ள ஆலய திருவிழாவிற்கு சென்றனர். இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

சிஜாவின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் காசி மாலை, ஒரு கிராம் கம்மலும், ரூ.2,500 ரொக்கப் பணமும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பிலிப் கொற்றியோடு போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிறிஸ்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் 2 கைரேகைகள் சிக்கி உள்ளது.

பிலிப் குடும்பத்தினர் ஆலயத்திற்கு சென்றிருப்பதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் மேலும் நகைகள் இருந்துள்ளது. அந்த நகைகள் கொள்ளையர்கள் கையில் சிக்கவில்லை. எனவே அந்த நகைகள் தப்பியது. கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள்.

பிலிப் குடும்பத்தினர் ஆலயத்திற்கு சென்ற நேரத்தில் கண்காணிப்பில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News