செய்திகள்

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு - பிரிட்டன் மந்திரி ராஜினாமா

Published On 2019-04-04 01:29 GMT   |   Update On 2019-04-04 02:59 GMT
‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் மந்திரி நைஜல் ஆடம்ஸ் ராஜினாமா செய்தார். #NigelAdams #Brexit
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் இதற்கு எதிராக வேல்ஸ் பகுதிக்கான மந்திரி நைஜல் ஆடம்ஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். “ஜெரேமி கார்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு” என அவர் கூறினார்.

பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவர் மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.  #NigelAdams #Brexit
Tags:    

Similar News