செய்திகள்
எய்ம்ஸ் டைரக்டர் ரன்தீப் குலேரியா

மக்கள் நெஞ்சில் பால் வார்த்த தகவலை தெரிவித்த எய்ம்ஸ் டைரக்டர்

Published On 2021-06-08 13:35 GMT   |   Update On 2021-06-08 13:35 GMT
இந்தியாவில் 3 அலை உருவாகினால், அதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவை கொரோனா தொற்றின் 2-வது அலை ஆட்டம் காண வைத்துவிட்டது. முதல் அலையை எளிதாக சமாளித்த இந்தியாவுக்கு 2-வது அலை கடும் சவாலாக திகழ்ந்தது. இதற்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்பட்டதுதான் முக்கிய காரணம். தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பு சுமார் 4 ஆயிரத்தை தொட்டது.

மேலும், இணை நோய் இல்லாத 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் கூட அதிக அளவில் உயிரழந்த சோகம் ஏற்பட்டது. தற்போது இந்தியாவில் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.

பொது மக்கள் மிக விரைவில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், தளர்வுகள் மூலம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், 3-வது அலை இந்தியாவில் உருவானால் அப்போது குழந்தைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் பேரதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் 3-வது அலையை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் தங்களை தயார்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில் தாய்மார்கள் ஆறுதல் அடையும் வகையில் எய்ம்ஸ் டைரக்டர் டாக்டர ரன்தீப் குலேரியா ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். அதில் ‘‘உலகளவில் அல்லது இந்தியாவில், குழந்தைதகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த கூர்நோக்கு தரவுகளும் இல்லை. 

2-வது அலையில் கூட குழந்தைகள் லேசாக உடல்நலக்குறைவு அல்லது இணை நோயால் பாதிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கடுமையான தொற்று ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News