ஆட்டோமொபைல்

அதிநவீன அம்சங்களுடன் எம்.ஜி. ஹெக்டார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-05-15 11:24 GMT   |   Update On 2019-05-15 11:24 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஜி. ஹெக்டார் காரை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.



எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. எம்.ஜி. ஹெக்டார் காருக்கான முன்பதிவு ஜூன் மாதத்தில் துவங்கி அதன் பின் வினியோகம் செய்யப்படுகிறது. 

புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வெர்ஷன் 48வோல்ட் ஹைப்ரிட் செட்டப் உடன் கிடைக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 14.16 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரிண்ட் லிட்டருக்கு 13.94 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன்  கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.

காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சர் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்கு எம்.ஜி. ஹெக்டார் காரில் 6 ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி திட்டம், டிராக்‌ஷன் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News