ஆன்மிகம்
மணக்குள விநாயகர்

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் மணக்குள விநாயகர்

Published On 2020-07-28 09:47 GMT   |   Update On 2020-07-28 09:47 GMT
மணக்குள விநாயகரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறுவதாக மக்களின் நம்பிக்கை. இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் அமைந்துள்ளது, மணக்குள விநாயகர் ஆலயம். இவரை ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ எனவும் அழைப்பார்கள். இந்தக் கோவிலைக் கட்டியவர் ஒரு வெள்ளைக்கார துரை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இந்த விநாயகருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இந்த விநாயகர், வேண்டியவர்களுக்கு வரம் அளித்து அருள்பாலிப்பவர். இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மணக்குள விநாயகரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறுவதாக மக்களின் நம்பிக்கை. இவ்வாலயத்தின் மேற்புறத்தில், ஒரு குளம் இருக்கிறது. கடற்கரை அருகில் உள்ளதால், அதில் மணல் அதிகமாக இருக்கும். அந்தக் குளத்திற்கு 'மணல் குளம்' என்று பெயர். அதனால் மணக்குள விநாயகர் ஆலயம் என்று பெயர் வந்துள்ளது.

சதுர்த்தி விரதம் வரும் ஆவணி மாதத்தில் இந்த விநாயகரை சென்று வழிபட்டு வந்தால், சகல பாக்கியங்களையும் பெறுவதற்கான வழிபிறக்கும். முதன் முதலில் சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள் ஆவணி மாதம் வரும் சதுர்த்தியில் விரதம் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று தரித்த பின் தொடங்க வேண்டும். 
Tags:    

Similar News