செய்திகள்
சுவாதி மாலிவாலுடன் நிர்பயாவின் பெற்றோர்

தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு

Published On 2019-12-13 12:10 GMT   |   Update On 2019-12-13 12:10 GMT
டெல்லி ராஜ்கட் அருகே கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால்-ஐ நிர்பயாவின் தாயார் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த மூன்றாம் தேதி டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

அவரது போராட்டம் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில்கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாரும் தந்தையும் இன்று சுவாதி மாலிவால்-ஐ சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  நிர்பயாவின் தாயார், ’பத்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவாலின் நியாயமான போராட்டத்தை இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயம்.

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News