ஆன்மிகம்
பழம்பேட்டை சர்க்கரை பிள்ளையார் கோவிலில் திருவிழா

பழம்பேட்டை சர்க்கரை பிள்ளையார் கோவிலில் திருவிழா

Published On 2021-01-30 08:12 GMT   |   Update On 2021-01-30 08:12 GMT
சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள சர்க்கரை பிள்ளையார் கோவிலில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் திருவுருவப்படத்தை திருத்தேரில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர்.
சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள சர்க்கரை பிள்ளையார் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடந்தது. காலை 9 மணி அளவில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் திருவுருவப்படத்தை திருத்தேரில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர் சர்க்கரை பிள்ளையார்கோவில் அருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

பின்னர் வெண்ணெய் காப்பு அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூைஜகள் நடந்தன. வந்தவாசி மாம்பட்டு மகா சக்தி பீடம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி உபாசகர் லட்சுமண சுவாமிகள் பிள்ளையாருக்கு கற்பூர ஆராதனை செய்து வணங்கினார். இதனை தொடர்ந்து சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைெயாட்டி பக்தி சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News