செய்திகள்
கோப்புப்படம்.

இயல்பு நிலைக்கு திரும்பிய மின்கட்டண கணக்கீடு பணி

Published On 2021-07-17 09:02 GMT   |   Update On 2021-07-17 09:02 GMT
கடந்த மாதம் மின்நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மீட்டர்களை பார்த்து சுயமாக கணக்கீடு செய்து அந்த அடிப்படையில் மின் கட்டணம் செலுத்தினர்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மின் இணைப்புகள் உள்ளன.

வழக்கமாக மின் பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று அங்குள்ள மீட்டர்களில் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து அட்டையில் பதிவு செய்வார்கள்.அதில் குறிப்பிட்ட தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடந்த மாதங்களில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவியது. இதை கட்டுப்படுத்த  அரசு ஊரடங்கை அமல்படுத்தியதோடு அரசு அலுவலகங்களில்  30 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட அனுமதித்தது.

இந்த விதிமுறையால் மின் கணக்கீட்டு பணி பாதிக்கப்பட்டது.கடந்த மாதம் மின்நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மீட்டர்களை பார்த்து  சுயமாக கணக்கீடு செய்து  அந்த அடிப்படையில் மின் கட்டணம் செலுத்தினர்.

தற்போது ஊரடங்கு 90 சதவீதம் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், அரசு எந்திரம் இயல்பாக சுழல தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக  மின்வாரியத்துறை ஊழியர்கள் வீடு தோறும் சென்று மின் கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News