லைஃப்ஸ்டைல்
செர்ரி பேஸ் பேக்

செர்ரி பழத்தை பயன்படுத்தி அழகான சருமத்தை பெறலாம்

Published On 2020-02-18 05:30 GMT   |   Update On 2020-02-18 05:30 GMT
சருமத்தை அழகாக்க செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.
சருமத்தை அழகாக்க செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

சருமத்தை அழகாக்க கிரீம்களை பயன்படுத்தி அழகாகும் செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. இதை பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

முகத்தை நன்றாக கழுவிய பின்னர் அரைத்த செர்ரி பழங்களை முகத்தில் தடவினால் சருமம் மென்மையாகவும் பளிச்சென்றும் மாறும். உங்களது சருமம் எண்ணெய் பசை நிறைந்ததாக இருந்தால் காய்ந்த செர்ரி பழங்களை பயன்படுத்த வேண்டும்.

செர்ரி பழங்களை நன்றாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை தடுக்கலாம்.

தேன் மற்றும் செர்ரி பழம் கலந்த கலவையை முகத்தில் பயன்படுத்தி 30 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் சுருக்கம் மறையும்.

ஆலிவ் எண்ணெயை அரைத்த செர்ரி பழங்களுடன் சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் வறட்சியான சருமத்தை நீக்கி எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும்.

முட்டையின் வெள்ளைக்கரு தேன் மற்றும் செர்ரி பழங்களை ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரினால் கழுவினால் சருமம் பளிச்சென்று மாறும்.
Tags:    

Similar News