ஆட்டோமொபைல்
ஹோண்டா

சத்தமின்றி விலை குறைந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கும் ஹோண்டா

Published On 2020-08-26 08:12 GMT   |   Update On 2020-08-26 08:12 GMT
ஹோண்டா நிறுவனம் தனது விலை குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலை சத்தமின்றி உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ஹோண்டா நிறுவனம் தனது மிகவும் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்சமயம் அந்நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக சிடி110 இருக்கிறது. அந்த வகையில் புது மோட்டார்சைக்கிள் சிடி110-க்கு கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

புதிய மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் மாடல்களுக்கான பிரிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என ஹோண்டா நம்புகிறது. தற்சமயம் ஹோண்டா சிடி110 விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், ஸ்பிளென்டர் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல்களை விரும்பும் வாடிக்கையாளர்களை ஹோண்டா கவர தவறுகிறது.



இந்த மோட்டார்சைக்கிள் ஊரக பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் புதிய ஹோண்டா மாடல் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மோட்டாக்சைக்கிள் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறியப்படவில்லை. எனினும், இந்திய சந்தையில் இந்த மாடல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News