ஆன்மிகம்
சிவலிங்கம்

சப்த தானத் தலங்கள்

Published On 2019-07-20 06:44 GMT   |   Update On 2019-07-20 06:44 GMT
காஞ்சீபுரத்துக்கு ஏழு முனிவர்கள் வருகை தந்து, சிவலிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் வழிபட்டனர். சப்ததான கோவில்கள் அனைத்தும் சிறிய வடிவில் கருவறை மட்டுமே கொண்ட கோவில்களாக அமைந்துள்ளன.
காஞ்சீபுரத்துக்கு ஏழு முனிவர்கள் வருகை தந்து, சிவலிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் வழிபட்டனர். அந்த தலங்கள் ஏழும் மஞ்சள் நீர்க் கால்வாயின் கரையில் அமைந்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த ஆலயங்கள் வியாச சாந்தலீஸ்வரர் தலத்தைச்சுற்றியே அமைந்துள்ளன.

சப்ததான கோவில்கள் அனைத்தும் சிறிய வடிவில் கருவறை மட்டுமே கொண்ட கோவில்களாக அமைந்துள்ளன. அத்திரி முனிவர், குச்ச முனிவர், வசிட்ட முனிவர், பிருகு முனிவர், சௌதம முனிவர், காசிப முனிவ, அங்கிரா முனிவர் ஆகிய 7 முனிவர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு அவர்களது பெயராலேயே இறைவனும் வழங்கப்பட்டான்.

ஏழு முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களின் அமைவிடம் வருமாறு:-

1.அத்திரிசம், 2. குச்சேசம்:- இவை இரண்டும் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் மகளிர்க்கல்லூரியின் வளாகத்தில் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் உள்ளே இடப்பக்கம் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் கிழக்கு நோக்கியவாறு ஒரு சிவலிங்கம் ஆவுடையாருடனும், மற்றொன்று அதன் பக்கத்தில் பாணத்துடனும் உள்ளன. இவை இரண்டும் அத்திரி, குச்சன் முனிவர்கள் வழிபட்டவையாகும்.

3.ஆங்கீரேசன்:- சாந்தாலீசுவரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் திருக்கோவில் பூசை செய்யும் குருக்கள் வீட்டினை ஒட்டியுள்ள சின்ன செட்டில் இச்சிவலிங்கம் உள்ளது.

4.வசிட்டேசம்:- அருள்மிகு சாந்தாலீசுவரர் திருக்கோவிலுக்கு எதிரில் திருக்குளம் அமைந்துள்ளது இத்திருக்குளத்தில் தெற்குக் கரையில் வசிட்டர் வழிபட்ட லிங்கம் அமைத்துள்ளது. இச்சிவலிங்கம் வெடித்துப் பின்பு கூடியதால் இப்பெருமான் வெடித்துக் கூடிய வசிட்டேசர் என்று அழைக்கப்படுகிறது.

5. கௌதமேசம்:- இச்சிவலிங்கம் காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் (கீழ் ரோட்டில்) வேகவதியாற்றின் பாலத்தைக் கடந்து சென்றால் செங்கல்வராயன் அவென்யூ வரும். அங்கே ஒரு தச்சுப்பட்டறைக்கு எதிரேயுள்ள வீதியில் ஒரு அரசரமரத்தடியில் பாணலிங்க வடிவில் உள்ளது.

6. காசிபேசம்:- சின்ன காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்குச் செல்லும் வழியில் ஆற்றங்கரையம்மன் கோவில் வளாகத்தில் அம்மன் சந்நிதியக்குத் தெற்கில் உள்ளது. ஆவுடையாருடன் கூடிய லிங்கம்.

7. பார்க்கவேசம்:- காஞ்சீபுரம் ரங்கசாமி குளத்தையடுத்த தும்பவனம் தெருவின் தெற்கில் மந்தை வெளியை அடுத்து வேகதவதி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆவுடையாருடன் கூடிய மூர்த்தி. பிருகு முனிவர் வழிபட்டது.

காஞ்சீபுரத்தில் கோவில்களை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சப்தரிஷிகள் வழிபட்ட இந்த 7 லிங்கங்களையும் மறக்காமல் சென்று வழிபடுங்கள்.
Tags:    

Similar News