ஆன்மிகம்
சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2021-03-16 07:30 GMT   |   Update On 2021-03-16 07:30 GMT
சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள செம்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார், கருப்பர் சாமி, உடையம்மைதாய் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கோவில் அருகே யாக சாலை அமைக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் ஆகியோர் அருளாசியுடன் கங்கா பூஜை, விக்னேஷ்வர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று காலை 9.30 மணியிலிருந்து 10.20 மணிக்குள் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசன நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை செம்பனூர் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய தர்ம பரிபாலன சங்க தலைவர் சுப்ரமணியன் செட்டியார், செயலாளர் சுப்பிரமணியன் அம்பலம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News