செய்திகள்
கொரோனா பரிசோதனை

பாண்டமங்கலத்தில் கொரோனா சிறப்பு பரிசோதனை

Published On 2020-11-22 06:03 GMT   |   Update On 2020-11-22 06:03 GMT
பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:

பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவசண்முகம், முருகன், லேப் டெக்னீசியன், கிராம சுகாதார செவிலியர் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதியில் இருந்து வந்த 140 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் எடுக்கப்பட்ட சளி மாதிரிகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முகாமில் வருவாய் துறையினர், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி முககவசம் அணிந்து வருகிறார்களா? என சோதனை நடத்தினர். அதில் முககவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News