உள்ளூர் செய்திகள்
திருவாரூர் ரெயில் நிலையத்தில் பணி மூட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-01-13 10:27 GMT   |   Update On 2022-01-13 10:27 GMT
திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. 

காலை 8 மணிக்குப் பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். 

மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு 
ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இன்று சொர்க்கவாசல் திறப்பு காரணமாக திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் மற்றும் புலிவலம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலை முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடுமையான பனிப் பொழிவின் காரணமாக கோவிலுக்குச் செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் அறுவடை பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் வயல்களில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் எந்திரங்களும் வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News