செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

நீட் தேர்வு எழுதிய 1 லட்சம் மாணவர்களுக்கு போனில் மனநல ஆலோசனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-09-14 08:33 GMT   |   Update On 2021-09-14 10:49 GMT
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பதை தடுக்க மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

நீட் தேர்வுக்கு பயந்து, மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். நேற்று முன்தினம் சேலத்தில் ஒரு மாணவர் இறந்தார். மாணவர்கள் இந்த மாதிரி விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மன நல கவுன்சிலிங் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பதை தடுக்கவும் அவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.



நீட் தேர்வை எழுதிய 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களையும் போனில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்படும். இதற்காக மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறையில் மனநல ஆலோசகர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மனநல ஆலோசனை வழங்குவார்கள்.

நாளை மறுநாள் சென்னையில் தொடங்கும். அதை தொடர்ந்து 38 மாவட்டங்களிலும் நடைபெறும். ஒரு வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News