ஆன்மிகம்
கொட்டாரம் ராமர் கோவிலில் ராமநவமி விழா

கொட்டாரம் ராமர் கோவிலில் ராமநவமி விழா

Published On 2021-04-22 04:03 GMT   |   Update On 2021-04-22 04:03 GMT
கொட்டாரம் ராமர் கோவில் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு கணபதி ஹோமம், கலச பூஜை, சிறப்பு பஜனை, ராமருக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் நந்தவனத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், கலச பூஜை, சிறப்பு பஜனை, ராமருக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர், ராமருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு, சந்தன காப்பு மற்றும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை, 9 அடி உயர ஆஞ்சநேயருக்கு அங்கி சாத்தி மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் அன்னதானம், இரவு ஆன்மீக சொற்பொழிவு, மலர்களால் ராமருக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது. இதில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் ராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News