செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

சர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்

Published On 2019-07-31 08:24 GMT   |   Update On 2019-07-31 08:24 GMT
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ‘ஓவர் த்ரோ’ மூலம் கிடைத்த நான்கு ரன்களை திரும்பப் பெறுமாறு கேட்கவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்கை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பரபரப்பான சூழ்நிலையில் ‘ஓவர் த்ரோ’ பவுண்டரி மூலம் இங்கிலாந்துக்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்ல இந்த ரன்தான் மிகமிக முக்கியத்துவமாக கருதப்பட்டது.

ஓடி எடுத்த இரண்டு ரன்களைத் தவிர ஓவர் த்ரோ மூலம் கிடைத்த நான்கு ரன்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நடுவரிடம் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டதாக முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியிருந்தார். இதை நடுவர் தர்மசேனா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்நிலையில் நான்கு ரன்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நான் கேட்கவில்லை. இருவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘எல்லா சம்பவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நான் அப்படி சொன்னேனா? என்று எனக்குள்ளே நினைத்துப் பார்த்தேன். ஆனால், எனது இதயத்தில் கைவத்து சொல்கிறேன்.  சம்பவம் நடந்த முடிந்த உடன் நான் நடுவரை நோக்கிச் செல்லவில்லை. அதேபோன்று நான்கு ரன்களை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள் நடுவர்களிடம் கூறும் நிலையிலும் இல்லை.

நான் நேராக டாம் லாதமிடம் சென்று வருத்தம் தெரிவித்தேன். அதுபோல் கேன் வில்லியம்சனையும் பார்த்து சைகையால் வருத்தம் தெரிவித்தேன்’’ என்றார்.
Tags:    

Similar News