ஆட்டோமொபைல்

ஹோன்டாவை பின் தள்ளி டாடா மோட்டார்ஸ் முன்னேற்றம்

Published On 2018-02-13 11:16 GMT   |   Update On 2018-02-13 11:16 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோன்டா நிறுவனத்தை பின்தள்ளி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
புதுடெல்லி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இந்த நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஹோன்டா நிறுவனத்தை பின்தள்ளி டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறது. ஹோன்டாவின் விற்னையும் 17 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கிறது. 

ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018 வரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,49,284 யுனிட் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. ஹோன்டா நிறுவனம் 1,44,802 யுனிட்களை விற்பனை செய்திருந்தது. 2017 நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் 1,53,151 யுனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஹோன்டா 1,57,313 யுனிட்களை விற்பனை செய்துள்ளது. 

ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் 5.33 சதவிகித பங்குகளுடன் இந்தியாவில் ஐந்தாவது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கிறது. ஆண்டு முழுக்க 30 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. மாருதி சுசுகி 50 சதவிகிதமும், ஹூன்டாய் நிறுவனம் 16 சதவிகத பங்குகளை பெற்றிருக்கின்றன. 

2019-ம் ஆண்டிற்குள் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் மாருதி சுசுகி, ஹூன்டாய், மற்றும் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. 

இந்தியவில் தனது முன்னணி இடத்தை பிடிக்க 2019 நிதியாண்டில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் புதிய எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News