தொழில்நுட்பம்

8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-06-01 04:51 GMT   |   Update On 2019-06-01 04:51 GMT
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.



ஒப்போ நிறுவனம் தனது ரெனோ இசட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் நிறுவனத்தின் புதிய ஹீலியோ P90 12 என்.எம். பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெனோ இசட் பெற்றிருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ரெனோ இசட் ஸ்மார்ட்போன் 4035 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



ஒப்போ ரெனோ இசட் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P90 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GM 9446 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 1/2.25″ சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, PDAF, CAF
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4035 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ரெனோ இசட் ஸ்மார்ட்போன் பர்ப்பிள், ஜெட் பிளாக், வைட் மற்றும் கோரல் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,270) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் கோரல் ஆரஞ்சு மற்றும் இன்ஸ்பிரேஷல் அல்லது கிரியேட்டிவ் எடிஷன் வேரியண்ட் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,630) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News