தொழில்நுட்பச் செய்திகள்
ட்விட்டர்

ட்விட்டர் பயனர்களுக்கு வெளியான குட் நியூஸ்

Published On 2022-03-05 07:47 GMT   |   Update On 2022-03-05 07:47 GMT
ஃபேஸ்புக், யூடியூப்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் இந்த சேவையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் ஸ்பேஸ் சேவையை கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதையடுத்து அந்த சேவை ட்விட்டர் பயனர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மற்றொரு ஆடியோ சேவையான போட்கேஸ்ட் சேவையையும் மொபைலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ட்விட்டர் ஆப்பிள், ஸ்பாடிஃபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் ஸ்பேஸ் அம்சத்தில் புதிய அப்டேட்டை வெளியிட்டது. இதன்மூலம் ஸ்பேஸ் சாட் ரூமில் பேசுபவர்களின் ஆடியோக்களை பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள் 30 நாட்கள் மட்டுமே இருக்கும். பின் தானாக டெலிட் ஆகிவிடும். இதுவே போட்கேஸ்ட் அம்சம் வந்தால் நிரந்தரமாக ஆடியோ தகவல்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் போட்கேஸ்ட் அம்சத்தை அறிமுகம் செய்தது. யூடியூப்பும் போட்கேஸ்ட் அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனமும் விரைவில் போட்கேஸ்ட் சேவையை தொடங்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News