தொழில்நுட்பம்
இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021

10 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிடும் கான்செப்ட் போன்

Published On 2021-06-29 04:12 GMT   |   Update On 2021-06-29 17:32 GMT
இன்பினிக்ஸ் நிறுவனம் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யும் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பத்தை இன்பினிக்ஸ் தனது கான்செப்ட் போன் 2021 மாடலில் வழங்கி இருக்கிறது. புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். 



புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இயக்கும் போதும் ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 40 டிகிரியை கடக்கவில்லை என இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வெப்ப அளவை கணக்கிட 20 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனைகளின் போது ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 37.3 டிகிரியாகவே இருந்தது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 88ºC வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் பட்டன்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இதில் 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.  
Tags:    

Similar News