ஆன்மிகம்
பைரவர்

பைரவ மூர்த்திக்கு 21 அஷ்டமி விரதம் இருந்தால்...

Published On 2020-09-28 05:59 GMT   |   Update On 2020-09-28 05:59 GMT
சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து 21 முறை இருப்பது சிறப்பாகும்.
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாகும். பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அபிஷேகப்பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து 21 முறை இருப்பது சிறப்பாகும். அந்த சமயத்தில், கால பைரவரின் மந்திரத்தை ஜபித்தால் என்பது பல மடங்கு நன்மையை நமக்கு செய்யும்.
Tags:    

Similar News