உள்ளூர் செய்திகள்
முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2022-04-15 10:23 GMT   |   Update On 2022-04-15 10:23 GMT
நாகை அருகே ஆதலையூர் கிராமத்தில் ஆற்றங்கரையில் உள்ள வீடுகளை காலி செய்ய மறுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்,:

நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களை நீதிமன்ற உத்தர-வுப்படி காலி செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றங்கரை அருகே வசிக்கும் 250 வீடுகளை 21 நாட்களில் காலி செய்ய பாசன பிரிவு உதவி பொறியாளர் 

உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். 

இந்த நிலையில் மாற்று இடம் வழங்க வேண்டியும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் கிராம மக்கள் ஆதலையூர் பகுதியில் திடீர் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆற்றங்க-ரையில் வசிக்கும் பட்டா இருக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்காததை கண்டித்தும், மாற்று இடம் வழங்கி வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும் கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தங்களை காலி செய்ய அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும், பல லட்சம் ரூபாய் செலவிட்டு கட்டிய கான்கிரீட் வீடுகளை விட்டு எப்படி செல்வது என்றும் 

கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

குடிநீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ள கிராம மக்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி மாற்று இடத்தில் வீடுகளை கட்டித்தர தமிழக 

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

நாகையில் வீடுகளை காலி செய்ய அரசு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News