ஆட்டோமொபைல்
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-09-18 08:52 GMT   |   Update On 2020-09-18 08:52 GMT
டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


டுகாட்டி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் டாப் எண்ட் மாடலான ஸ்கிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் ப்ரோ மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மாடலில் ரெட்ரோ ஸ்டைல், வட்ட வடிவ ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ட்வின் அன்டர்-சீட் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. டுகாட்டி 1100 ப்ரோ மாடல் ஓசன் டிரைவ் நிறத்தில் கிடைக்கிறது. ஸ்கிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் ப்ரோ மாடல் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.



தோற்றத்தில் இரு மாடல்களின் காஸ்மெடிங் அம்சங்கள் மட்டும் மாற்றப்படுகின்றன. 1100 ப்ரோ மாடலில் 45எம்எம் மர்சொக்கி ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுகிறது. ப்ரோ ஸ்போர்ட் மாடலில் ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடல்களில் 1079 சிசி, எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 83.5 பிஹெச்பி பவர், 90.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News