ஆட்டோமொபைல்
நிசான் கிக்ஸ்

நிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்

Published On 2019-08-18 09:38 GMT   |   Update On 2019-08-18 09:38 GMT
நிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.



ஆட்டோமொபைல் சந்தையில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் அதிக பிரபலமாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்துள்ளது.

நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது. டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் வேரியண்ட்களிலும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.

டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கு சி.வி.டி. ஆப்ஷன் இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன் வழங்கப்பட்டு விடும். நிசான் கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நிசான் இந்தியாவின் விற்பனை பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.



நிசான் நிறுவனம் டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இரு வாகனங்களிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

நிசான் கிக்ஸ் கார் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்.யு.வி.யில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News