தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங்

வெளியீட்டுக்கு முன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள்

Published On 2022-01-25 04:12 GMT   |   Update On 2022-01-25 04:12 GMT
சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அதன்படி கேலக்ஸி எஸ்22 மாடலின் விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,801 துவங்குகிறது. கேலக்ஸி எஸ்22 பிளஸ் விலை 1049 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 88,716 என்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை 1249 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,05,630 என துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 



தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22  சீரிஸ் மாடல்களில் சிலவற்றை 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரியுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதேபோன்று 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி ஆப்ஷனும் சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

2022 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த நிகழ்வு சரியாக இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. முந்தைய ஆண்டுகளை போன்றே இம்முறையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்  சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், கேலக்ஸி எஸ்22 சீரிஸ் அம்சங்கள், விலை மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இதே நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News