தொழில்நுட்பம்
போக்கோ

அசத்தல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது போக்கோ ஸ்மார்ட்போன்

Published On 2020-08-24 04:47 GMT   |   Update On 2020-08-24 04:47 GMT
போக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே விவரங்கள் இணையத்தில் லீக் வெளியாகி இருக்கின்றன.


சியோமியின் போக்கோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போக்கோ குளோபல் விளம்பர பிரிவு மேலாளர் அங்கஸ் கை ஹோ என்ஜி அதிக ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே பற்றிய தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டு, பின் அந்த ட்வீட்டை அவர் அழித்து விட்டார்.

அந்த வகையில் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிநவீன டிஸ்ப்ளே கொண்ட புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 



தற்போதைய தகவல்களின் படி போக்கோவின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி 5ஜி பிராசஸர், 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதுவரை புதிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News