ஆன்மிகம்
ஆதிசங்கரர்

ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்

Published On 2021-11-01 07:56 GMT   |   Update On 2021-11-01 07:56 GMT
இந்து தர்மம் தழைக்கச் செய்த மாபெரும் ஞானி ஜகத்குரு ஆதிசங்கரர். எப்போதும் நன்மையே செய்பவர்; எப்போதும் இன்பத்தையே தருபவர். ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகத்தை பார்க்கலாம்.
ஸ்ரீ குருப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர:
குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:||

அஜ்ஞான திமிராந்ந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா|
சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:||

ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்.:—

ஸத்யானந்த ஸ்வரூபாய போதைக ஸுக காரிணே|
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே ||

நம: சாந்தாத்மனே துப்யம் நமோ குஹ்யதமாய ச |
அசிந்த்யாயாப்ரமேயாய அனாதினிதனாய ச ||

அமானினே மானதாய புண்ய ச்லோகாய மானினே |
சிஷ்ய சிக்ஷண தக்ஷாய லோக ஸம்ஸ்திதி ஹேதவே||

ஸ்வனுஷ்டித ஸ்வதர்மாய தர்ம மார்க ப்ரதர்சினே|
சமாதி ஷட்காச்ரயாய ஸ்திதப்ரஜ்ஞாய தீமதே ||

பக்த ஹார்த்த தமோபேத திவ்ய தேஜஸ்ஸ்வரூபிணே||

- இதனைப் பாராயணம் செய்து தூப தீப, நேவேத்யம் செய்து, ஆரத்தி எடுத்து சுலபமாகப் பூஜை செய்யலாம். அவர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம்.

மௌனவ்யாக்யா
பரப்ரஹ்ம தத்வம்
யுவானாம் வர்ஷிஷ்டாந்தே

- என ஆரம்பிக்கும் குரு ஸ்லோகம் ஒவ்வொரு ஸ்லோகம் முடிவிலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே என்று முடிவதால் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. அதனைப் பாராயணம் செய்தும் குருவருள் பெறலாம். அகண்டமண்டலாகாரம் எனத் துவங்கும் குரு ஸ்லோகமும் சாலச் சிறந்தது. அவரவர் கால அவகாசத்திற்கு ஏற்ப ஏதெனும் ஒரு குருஸ்லோகம் தினமும் பாராயணம்  செய்வது அவசியம்.

த்யானமூலம் குரோர் மூர்த்தி: பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ர மூலம் குரோர் வாக்யம் மோக்ஷ மூலம் குரோ: க்ருபா

என்று சாஸ்த்ரங்களில் கூறியிருக்கபடியால் குருதான்
அனைத்திற்கும் மூல காரணமாயிருப்பவர்.

ஆதிசங்கரர் நம் ஷண்மத, ஸனாதன தர்மத்தின்
காரண கர்த்தா! அவரை மனதில் இருத்தி பூஜை செய்து குருவருளைப் பெறுவோமாக.

ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய குரு சங்கர
சிவ குரு சங்கர சம்போ சங்கர சதாசிவ சங்கர…

Tags:    

Similar News