ஆன்மிகம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் தேர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நாளை மாசித்திருவிழா தேரோட்டம்

Published On 2021-02-25 09:01 GMT   |   Update On 2021-02-25 09:01 GMT
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் 9-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருள்கிறார்கள். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் சுவாமி தேரும், பின்னர் உலகம்மன் தேரும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றது.

தேரோட்டத்திற்காக தேர்கள் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.
Tags:    

Similar News