செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி குறித்து வைரலாகும் படம்

Published On 2021-09-28 05:20 GMT   |   Update On 2021-09-28 05:20 GMT
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறி பிரதமர் மோடி அடங்கிய செய்தி குறிப்பு வைரலாகி வருகிறது.


அமெரிக்க செய்தி நிறுவனமான நியூ யார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவரின் சமீபத்திய அமெரிக்க பயணத்தை குறிக்கும் தலைப்பு கொண்ட செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை. உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர், இங்கு நம்மை ஆசிர்வதிக்க வந்திருக்கிறார்,' எனும் தலைப்பு கொண்ட செய்தி தொகுப்பு வைரலாகும் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது.



வைரல் படத்தை ஆய்வு செய்ததில், அது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது. வைரல் பதிவுகளிடையே பலர் இந்த படம் போலியானது என கருத்து தெரிவித்து இருக்கின்றனர். மேலும் சிலர், இந்த படத்தில் எழுத்துப்பிழை இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி குறித்து வெளியானதாக வைரலாகும் செய்தி குறிப்பு போலியான ஒன்று என உறுதியாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்று பயணத்தை முடித்து கொண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார்.
Tags:    

Similar News