செய்திகள்
கேஎன் நேரு

கூட்டணியிலிருந்து ஐ.ஜே.கே. கட்சி வெளியேறியதால் தி.மு.க.வுக்கு எந்த நஷ்டமும் இல்லை- கேஎன் நேரு பேட்டி

Published On 2021-02-27 08:36 GMT   |   Update On 2021-02-27 08:36 GMT
கூட்டணியிலிருந்து ஐ.ஜே.கே. கட்சி வெளியேறியதால் தி.மு.க.வுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு கூறியுள்ளார்.

திருச்சி:

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் முதன்மை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் வருகிற மார்ச் 14-ந்தேதி தி.மு.க.வின் 11-வது மாநில மாநாடு நடைபெறுவதாக தலைவர் அறிவித்தார். ஆனால் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் ஐபேக்கிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.

அதேபோல் 7-ந்தேதி நடைபெறவிருந்த பொதுக் குழுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. குழுவினருடன் இன்று மாலை 7 மணிக்கு தலைவர் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் நானும் பங்கேற்கிறேன்.

மாநாடு நடைபெறாவிட்டாலும் விரைவில் திருச்சியில் தி.மு.க. கூட்டம் நடத்தப்படும். அதற்கு நிச்சயம் தலைவர் வருவார். தி.மு.க. கூட்டணியிலிருந்து ஐ.ஜே.கே. கட்சி வெளியேறுவதை தடுத்தபோதிலும் அவர்கள் சென்று விட்டார்கள். ஐ.ஜே.கே. வெளியே சென்று என்ன செய்யப்போகிறது

இதனால் தி.மு.க.வுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. மாறாக அவர்களுக்கு தான் நஷ்டம். தேர்தல் நேரத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிடப்படும் ஒப்பந்தங்கள் நிச்சயம் செல்லாது. புதிய ஆட்சி வரும்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. ஆட்சி முடியும் கடைசி நேரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன், நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதை எப்படி அமல்படுத்த முடியும், எப்படி நிதி ஒதுக்கீடு செய்வார்கள், அரசாணை எப்போது வெளியிடப்படும்? அவ்வாறு அரசாணை வெளியிட்டாலும் கோர்ட்டுக்கு செல்லும் நிலைதான் ஏற்படும். ஆகவே இந்த மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நகை கடன் தள்ளுபடியை நடை முறைப்படுத்த இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News