ஆன்மிகம்
விநாயகர்

விநாயகருக்கு சிறப்புமிக்க திருக்கோவில்கள்

Published On 2020-08-26 05:31 GMT   |   Update On 2020-08-26 05:31 GMT
விநாயகருக்கு என பிரத்தியேகமாகவும் பல திருக்கோவில்கள் நாடு முழுவதும் அமைந்திருக்கின்றன. அவற்றில் இந்திய அளவில் 10 ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன.
தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகளை நாம் காண முடியும். அதுதவிர எந்த ஆலயமாக இருந்தாலும் அங்கு விநாயகருக்கு சன்னிதிகள் இல்லாமல் இருக்காது. இருப்பினும் விநாயகருக்கு என பிரத்தியேகமாகவும் பல திருக்கோவில்கள் நாடு முழுவதும் அமைந்திருக்கின்றன. அவற்றில் இந்திய அளவில் 10 ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள போஹ்ரா கணேஷ் கோவில், ரந்தாம்புர் கணேஷ் கோவில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மற்றும் வரதவிநாயகர் கோவில், புனே ஸ்ரீமத் டக்குஷேர்ஹால்வி விநாயகர் கோவில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொட்டகணபதி கோவில், இடார்கஞ்ச் ஸ்ரீவிநாயகருதேவரு கோவில், ஹம்பி விநாயகர் கோவில், ஆந்திர மாநிலம் காணிபாக்கம் விநாயகர் கோவில், கேரளாவில் உள்ள மாத்தூர் விநாயகர் கோவில், கொட்டாரக்காரா விநாயகர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் ஆகியவை முக்கியமானவை.
Tags:    

Similar News