செய்திகள்
கஞ்சிகோட்டில் தொழிற்சாலை அருகே முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தை காணலாம்

தொழிற்சாலைக்குள் புகுந்து மிரட்டிய யானைகள் கூட்டம்- பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்

Published On 2021-09-21 06:17 GMT   |   Update On 2021-09-21 06:17 GMT
பாலக்காடு வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து 4 மணி நேரம் போராடி 18 யானைகளையும் காட்டுக்குள் விரட்டினர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கஞ்சிக்கோடு. இது தொழில் பேட்டைகள் நிறைந்த ஒரு சிறிய நகரமாகும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

கஞ்சிகோடு , வாளையார் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் வந்து விளைபொருட்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

ஊருக்குள் புகும் யானைகளை பொதுமக்களும், வனத்துறையினரும் காட்டுக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கஞ்சிக்கோட்டில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் காட்டுக்குள் இருந்து சுமார் 18 யானைகள் வந்து முகாமிட்டது.

இதனால் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த யானை கூட்டம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் சுவரை இடித்து தள்ளியது. அப்போது அங்கிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றனர். இந்த செய்தி காட்டு தீய போல பரவியது. உடனே ஊர் மக்கள் யானை கூட்டத்தை பார்க்க அங்கு திரண்டனர்.

இதுகுறித்து பாலக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து 4 மணி நேரம் போராடி 18 யானைகளையும் காட்டுக்குள் விரட்டினர்.


Tags:    

Similar News