செய்திகள்
தீபக் சாஹர்

ஹாட்ரிக் விக்கெட்டுடன் டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தீபக் சாஹர்

Published On 2019-11-11 09:55 GMT   |   Update On 2019-11-11 09:55 GMT
வங்காளதேச அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய தீபக் சாஹர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 174 ரன்கள் குவித்தது.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12.5 ஓவரில் 110 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 43 பந்தில் 65 ரன்களே தேவைப்பட்டது.

தீபக் சாஹர் வீசிய 13-வது ஓவரில் கடைசி பந்தில் முகமது மிதுன் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வங்காளதேசம் அணியை 144 ரன்னில் ஆல்அவுட் ஆக்கினார்.

மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை கொடுத்தாலும் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3.2 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.

இதற்கு முன் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது சாஹர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஜந்தா மெண்டிஸ் 3-வது இடத்தில் உள்ளனார். சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், இர்பான் பாதான் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சேத்தன் சர்மா, கபில் தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
Tags:    

Similar News