லைஃப்ஸ்டைல்
கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட்

உடலின் ஆற்றலை அதிகரிக்கும் கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட்

Published On 2021-09-16 05:43 GMT   |   Update On 2021-09-16 05:43 GMT
சோளத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், உடல் எடையை அதிகரிப்பதற்கு பதிலாக, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். நாள் முழுவதும் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், ஸ்நாக்ஸாக சோளத்தை சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்

கார்ன் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1/2 கப்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரட் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை

ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

கார்னை கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த கார்னை ஒரு பாத்திரத்தில் போடு அதனுடன் உருளைகிளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி - பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு, பிரட் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின், கையில் எண்ணெய் தடவி எடுத்து வைத்துள்ள மாவு கலவையினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்களை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
Tags:    

Similar News