செய்திகள்
மல்லிகைப்பூ

திருக்கார்த்திகையை முன்னிட்டு ஒரே நாளில் 20 டன் பூக்கள் விற்பனை

Published On 2020-11-29 08:02 GMT   |   Update On 2020-11-29 08:02 GMT
திண்டுக்கல்லில் திருக்கார்த்திகையை முன்னிட்டு 20 டன் பூக்கள் விற்பனை ஆகின. அதிகபட்சமாக மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை ஆனது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி, கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. இங்கு பயிரிடப்படும் பூக்கள், திண்டுக்கல் பூ மார்க்கெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் சராசரியாக 10 டன் பூக்கள் வரை விற்பனையாகும். மேலும் பண்டிகைகள், திருவிழா, முகூர்த்த நாட்களில் விற்பனை அதிகரிக்கும்.

இந்தநிலையில் திருக்கார்த்திகை திருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்காக குவிந்தனர். இதில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் பூக்களை வாங்கினர்.

இதனால் பூக்களின் விற்பனை களைகட்டியது. மாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்கள் மட்டுமின்றி பெண்கள் கூந்தலில் சூடும் பூக்களும் அதிகமாக விற்பனையாகின. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 20 டன் பூக்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்க குவிந்ததால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500-க்கும், முல்லைப்பூ ரூ.1,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கனகாம்பரம் ரூ.800-க் கும், சாதிப்பூ மற்றும் காக் கரட்டான் பூ தலா ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும், சம்பங்கி ரூ.200-க் கும், செண்டு மல்லிப்பூ ரூ.100-க் கும், கோழிக்கொண்டை பூ ரூ.30-க்கும் விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News