கார்
2022 ஆடி கியூ7

2022 ஆடி கியூ7 உற்பத்தி துவக்கம்

Published On 2021-12-11 09:06 GMT   |   Update On 2021-12-11 09:06 GMT
ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 எஸ்.யு.வி. மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய ஆடி கார் உற்பத்தி ஔரங்காபாத் ஆலையில் துவங்கியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் கியூ சீரிஸ் மாடல்கள் ஆகும். புதிய கியூ7 முன்புறம் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட்கள், பெரிய ஏர் இன்டேக், குரோம் கார்னிஷ், பின்புறமும் எல்.இ.டி. லைட்டிங் உள்ளது.



ஆடி கியூ7 பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரீமியம் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கியூ7 மாடலில் ரியர்-சைடு ஏர்பேக், ஹீடெட் ஓ.ஆர்.வி.எம்.-கள், மேம்பட்ட டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளது.

2022 ஆடி கியூ 7 மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில்-லைட்கள், பெரிய ஏர் இன்டேக், வட்ட வடிவ வீல் ஆர்ச்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஆடி கியூ7 மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News