விளையாட்டு
ரிஷப் பண்ட்

3வது டெஸ்டில் ரிஷப் பண்ட் செய்யவேண்டியது என்ன? - சொல்கிறார் பிரக்யான் ஓஜா

Published On 2022-01-11 01:24 GMT   |   Update On 2022-01-11 01:24 GMT
இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரி‌ஷப் பண்ட் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இரண்டாவது போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரி‌ஷப் பண்ட் களம் இறங்கினார். அப்போது அனுமன் விஹாரியும் களத்தில் இருந்தார். ஆனால் ரி‌ஷப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பண்ட் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரி‌ஷப் பண்ட் ஆடிய ஷாட் குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விமர்சனம் செய்துள்ளார்.

ரிஷப் பண்ட் அப்போது தேர்வு செய்த ஷாட்டை பார்க்கையில் அவர் போஸ்ட்பெய்ட் சர்வீசில் இருந்து பிரீபெய்டு சர்வீசுக்கு மாறி வருவதுபோல் இருந்தது என வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், காயம் காரணமாக சிராஜ் ஆடவில்லை என்றால் இஷாந்த் சர்மா கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News