ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா நாளை தொடக்கம்

Published On 2021-11-13 08:38 GMT   |   Update On 2021-11-13 08:38 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் லட்சதீபம் வருகிற 19-ந் தேதி ஏற்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

முக்கிய திருவிழாவான 19-ந் தேதி பெரியகார்த்திகை அன்று கோவிலில் மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.

திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News