உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட காட்சி.

கோவில்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Published On 2022-01-16 06:34 GMT   |   Update On 2022-01-16 06:34 GMT
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் குழந்தைகள் மையத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் மைய எண் 80-ல் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வேலாயுதபுரம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

அதில்  வெள்ளம், பச்சரிசி, நெய், முந்திரி, கரும்பு, உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க பெற்றோர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இலவச கையேடு, வழங்கும் விழா சாத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வேலாயுதபுரம் அங்கன்வாடி மையத்தில்  நடைபெற்றது. 

விழாவில் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற ஜோதி காமாட்சி வரவேற்றார். நற்பணி மன்ற நிர்வாகியும், தொழிலதிபருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். 

நகர இணை செயலாளர் சந்திரசேகர், நகர செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மன்ற உறுப்பினர்கள் முத்து மாரியப்பன், வேலாயுதபுரம் மன்ற பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கோவில்பட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி ஜெயக்கொடி, தொழி லதிபர் சீனிவாசன், பிரபாகரன் ஆகியோர் பொங்கல் தொகுப்பினை வழங்கினர். மேலும் அய்யப்ப பக்தர்களுக்கு காய்கனி தொகுப்பினை வழங்கினர்.

 நிகழ்ச்சியில் அங்கன்வாடி பொறுப்பாளர் சண்முகசுந்தரி, மேற்பார்வையாளர்கள் அமுதம், பாலம்மாள், குழந்தைகள் நல பணியாளர் ஷபீனா, குழந்தைகள் நல உதவியாளர் முனீஸ்வரி உட்பட ஏராளமான குழந்தை களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு தொகுப்பினை பெற்று பயனடைந்தனர்.
Tags:    

Similar News