செய்திகள்
திருமுருகன் காந்தி

ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கோர்ட்டில் திருமுருகன் காந்தி ஆஜர்

Published On 2020-12-23 07:34 GMT   |   Update On 2020-12-23 07:34 GMT
ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கோவில்பட்டி கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கோவில்பட்டி:

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையினால் பொதுமக்களுக்கு நோய் பரவுவதாக கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு மே மாதம் அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் பொதுமக்கள் 100 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி, போராட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு உள்ளிட்ட 16 பேர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ. டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இந்த வழக்கு கோவில்பட்டி கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராகும்படி கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து திருமுருகன் காந்தி, பாத்திமா பாபு ஆகியோர் இன்று (23-ந்தேதி) ஆஜராகும்படி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இன்று காலை கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதி தாசன் முன்பு ஆஜராகினர்.

Tags:    

Similar News