செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-12 11:17 GMT   |   Update On 2021-10-12 11:17 GMT
தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் லோயர் கேம்பில் இருந்து மதுரை கூட்டு குடிநீருக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.
தேனி:

தேனி மாவட்டம், லோயர் கேம்பில் இருந்து மதுரை கூட்டு குடிநீருக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு, கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்புக்குழு, கோம்பை 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம், பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம், 5 மாவட்ட விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்பட 23 அமைப்பினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் தலைவர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் லோயர் கேம்பில் இருந்து மதுரை கூட்டு குடிநீருக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றனர்.
Tags:    

Similar News