தொழில்நுட்பம்

ரூ.8000 பட்ஜெட்டில் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

Published On 2019-03-05 05:22 GMT   |   Update On 2019-03-05 05:22 GMT
சியோமி நிறுவனம் ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi7 #Smartphone



சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ.10,000 மற்றும் ரூ.15,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சியோமி தனது ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

சீனாவின் TENAA வலைதளத்தில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:

- 6.26 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 632/636 பிராசஸர்
- 2/3/4 ஜி.பி. ரேம்
- 16/32/64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி எல்.டி.இ. மற்றும் வோல்ட்இ
- மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9 பை, MIUI 11
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்

விலையை பொருத்தவரை ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News