ஆன்மிகம்
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2020-11-18 06:20 GMT   |   Update On 2020-11-18 06:20 GMT
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை சமேத பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் சங்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை சமேத பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சங்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.

தொடர்ந்து காலையில் சிவனுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் முக்கிய நிகழ்ச்சியான 108 சங்கு அபிஷேகம் மற்றும் மகா சிவசக்தி சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை குமார், ஹரி தலைமையில் முருகானந்தம் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News