செய்திகள்
வழக்குப்பதிவு

ஊரடங்கை மீறி கோவில் விழா- போலீசார் வழக்குப்பதிவு

Published On 2021-06-08 03:35 GMT   |   Update On 2021-06-08 03:35 GMT
விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள கோவிலில் கொடை விழாவின் நிறைவு நாளில் பொதுமக்களுக்கான கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள கோவிலில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. விழாவின் நிறைவு நாளில் பொதுமக்களுக்கான கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

விழாவில் ஏராளமானவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பங்கேற்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சங்கரலிங்கபுரம் போலீசார், ஊரடங்கை மீறி விழா நடத்தியதாக நாகலாபுரத்தைச் சேர்ந்த கோவில் நிர்வாகிகள் 13 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News