ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

Published On 2020-12-11 08:06 GMT   |   Update On 2020-12-11 08:06 GMT
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வருகிற 25-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம்.

ஏகாதசி, துவாதசி என 2 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

சொர்க்கவாசல் வழியாக 10 நாட்கள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை பரிசீலித்த தேவஸ்தான அதிகாரிகள் இந்த ஆண்டு சொர்க்கவாசல் வழியாக 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்தனர்.

வருகிற 25-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக ரூ.300 கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய முன்பதிவில் ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. 
Tags:    

Similar News