ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ ஐ3

எல்லா கார்களும் எலெக்ட்ரிக் மாடலாக மாறினால் உலகில் ஏற்படும் சுவாரஸ்ய மாற்றங்கள்

Published On 2020-07-10 09:11 GMT   |   Update On 2020-07-10 09:11 GMT
கார்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறினால் உலகில் ஏற்படும் சுவாரஸ்ய மாற்றங்கள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


உலகில் போக்குவரத்து வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை பயன்படுத்தும் வழக்கம் பலஆண்டுகளாக நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் தொடர்ந்து அதிக காலக்கட்டத்திற்கு பயன்படுத்த முடியாது. இதனால் பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் திறன் கொண்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.

சமீப காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு மற்றும் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனினும், பெட்ரோல், டீசல் வாகனங்களே ஆட்டோமொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 



இந்நிலையில், கார்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி பல்வேறு நிறுவனங்கள் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 

அவ்வாறு ஆய்வுகளின் அடிப்படையில் வெளியாகி இருக்கும் தகவல்களில், உலகில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் பயன்படுத்தும் போது ஆட்டோமொபைல் சந்தையில் 99 சதவீத கார்கள் முற்றிலும் மாறிவிடும். உலகில் மின்சாரத்திற்கான தேவை 21 சதவீதம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு 7 சதவீதம் வரை குறையும் என தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News