செய்திகள்

லண்டன் ஓவல் டெஸ்டில் ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டம் - 2ம் நாள் மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 304/8

Published On 2018-09-08 12:27 GMT   |   Update On 2018-09-08 13:40 GMT
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
லண்டன்:

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லரும், அடில் ரஷீத்தும் களத்தில் இருந்தனர்.



இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அடுத்து இறங்கிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  

இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 63 ரன்னுடனும், பிராடு 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 90 ரன்களை சேர்த்துள்ளது. 

இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா2 விக்கெட்டும் வீழ்த்தினர். #ENGvIND
Tags:    

Similar News