வழிபாடு
திருப்பதி ரதசப்தமி (பழைய கோப்புபடம்)

திருப்பதியில் வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா

Published On 2022-01-28 09:04 GMT   |   Update On 2022-01-28 09:04 GMT
திருப்பதியில் வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. மாடவீதிகளில் வாகன வீதிஉலா கிடையாது என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருப்பதி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று சற்று குறைந்து வரக்கூடிய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. உரிய நிபந்தனைகளை கடைபிடித்து ஏழுமலையானை தரிசிக்க குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது தடுப்பூசி பணிகள் வேகம் அடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்டது போன்று மீண்டும் இலவச தரிசனத்தை அனுமதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இதனால் பல மாதங்களாக ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

திருப்பதியில் வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. அன்றுஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் வீதிஉலா வருவார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற பிரம்மோற்சவ வாகன சேவையை போன்று கோவிலுக்கு உள்ளேயே கல்யாண மண்டபத்தில் ரதசப்தமிக்கான வாகன சேவை பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News